]]

Friday, June 15, 2007

பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் வேலை கேட்டு சொந்த மாவட்டங்களில் பதிவு செய்ய ஏற்பாடு

பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் வேலை கேட்டு சொந்த மாவட்டங்களில் பதிவு செய்ய ஏற்பாடு

காஞ்சிபுரம் : தமிழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திலே தங்கள் பெயரை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி நடப்பாண்டிற்குள் முடிந்து விடும் என தமிழக தொழிலாளர் துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் தற்போது பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் தங்கள் பெயரை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். ஆனால் அவர்கள் அளிக்கும் விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு அட்டை வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. எனவே மேற்படிப்பு படித்தவர்கள் நேரடியாக சென்னை வந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பட்ட மேற்படிப்பு விவரங்களை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இன்டர்நெட் மூலம் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும். குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. குழந்தைகளை வேலைக்கு வைப்பவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். கடந்த ஆண்டு குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியவர்களிடமிருந்து ரூ.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்கள் பிரச்னை இருப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

0 comments: