]]

Friday, June 15, 2007

எம்.பி.ஏ., படிப்புக்கு 20ம் தேதி முதல் விண்ணப்பம்

எம்.பி.ஏ., படிப்புக்கு 20ம் தேதி முதல் விண்ணப்பம்

சென்னை: முதலாமாண்டு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 20ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

முதலாமாண்டு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்கள் கிடைக்கும் கல்லுரிகள் விவரம்:
1. மைய பாலிடெக்னிக் கல்லுரி, சென்னை
2. தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லுரி, வேலுõர்
3. அரசு பொறியியல் கல்லுõரி, பர்கூர்
4. அரசு பொறியியல் கல்லுõரி, சேலம்
5. அரசு பொறியியல் கல்லுõரி, கோவை
6. அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லுõரி, காரைக்குடி
7. தியாகராஜர் பொறியியல் கல்லுõரி, மதுரை
8. அரசு பொறியியல் கல்லுõரி, திருநெல்வேலி
9. மாநிலக் கல்லுõரி(தன்னாட்சி), சென்னை
10. அரசு கலைக் கல்லுõரி(தன்னாட்சி), கோவை
11. அரசு கலைக் கல்லுõரி(தன்னாட்சி), கும்பகோணம்.
12. அரசு கலைக் கல்லுõரி, பரமக்குடி
13. புனித சவேரியார் கல்லுõரி, பாளையங்கோட்டை
14. ஜமால் முகமது கல்லுõரி, திருச்சி
15. எஸ்.டி.இந்து கல்லுõரி, நாகர்கோவில்.

விண்ணப்ப படிவங்களை நேரடியாக அல்லது அஞ்சல் மூலம் மேற்படி கல்லுõரிகளில் வாங்க விரும்புவோர், பிற இனத்தவர் 300 ரூபாய்க்கும், தமிழகத்தைச் சேர்ந்த பட்டியல், பழங்குடி இனத்தவர் 150 ரூபாய்க்கும், வரைவோலை எடுத்து, "செயலாளர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை 2007, ஜி.சி.டி., கோவை' என்ற முகவரியில் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, இனவாரியாக கல்வித்தகுதி அடிப்படையில் பொறியியல் கல்லுõரி, கலைக் கல்லுõரிகளில் ஒதுக்கீடு செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கோவை அரசு பொறியியல் கல்லுõரிக்கு, அடுத்த மாதம் 4ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

said...

அஸ்ஸலாமு அலைக்கும்

said...

நல்ல விபரங்களை திரட்டிக் கொடுக்கின்றீர்கள். ஆனாலும் ஒரே நாளில் பல தகவல்களை வெளியிடாமல் ஒன்றிரண்டு என்று வெளியிட்டால் நல்லது. அப்போதுதான் முதல் பக்கத்தில் பயனுள்ள தகவல்கள் நீண்ட நாட்களுக்கு மக்கள் பார்வைக்கு இருக்கும். கொஞ்சம் கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.

said...

அன்பிற்குரிய பரங்கிப்பேட்டை இணைய குழு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நலம் நலமறிய ஆவல். நிற்க...

தங்களின் மடல் கிடைக்கப்பெற்றேன். தங்களின் ஆலோசனைக்கு என் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம் இணையதளம் இன்னும் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி பல்வேறு செய்திகளை நம் நகர மக்களுக்கு தெரியப்படுத்துவதாக மாற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை மட்டுமல்ல நம் அனைவரின் ஆசையும் கூட.

அந்த அடிப்படையில் நம் ப்ளோக்ஸ்பாட் இணையபக்கத்தில் பல்வேறு மாறுதல்களை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

1. நம் சமூக மக்களுக்கு தேவையான தகவல்களை திரட்டித்தரும் பலவகையான பயனுள்ள இணையதளங்களின் தொடர்பு(லிங்க்)கள்.
2. நம் ஊரின் வரலாற்றை பதிவுசெய்யும் விதத்தில் நம் குடும்பத்தில் / ஊரில் / வெளியூரில் / வெளி மாநிலத்தில் / வெளிநாட்டில் வாழும் மூத்தோர்களிடமிருந்து தகவல்களை திரட்ட வேண்டும். அது மட்டுமன்று நம் ஊர் குறித்த வரலாறுகள், படங்கள், ஆவணங்கள் எங்கிருப்பினும் சாதி மதம் பாராமல் அவற்றை சேகரிப்பதற்கு முன் வரவேண்டும்.
3. வேலைவாய்ப்பு தளங்களின் இணையபக்கங்கள்.
4. கல்வி விழிப்புணர்வு மற்றும் அது சார்ந்த இணையதளங்கள்.
5. உடனுக்குடன் உலக செய்திகளை தெரிந்துகொள்வதற்கான இணைய தொடுப்புகள்.
6. பொது அறிவு மற்றும் சுய முன்னேற்ற தளங்கள்.
7. இணையதள வடிவமைப்பு குறித்து சிறிது அறிந்த படித்த சகோதரர்கள் / சகோதரிகள் யாராகிலும் நம் ஊரில் இருந்தால் ஒரு நாளைக்கு சிறிது நேரம் ஒதுக்கி நம் ஊரில் நடந்த / நடக்கப்போகின்ற நிகழ்ச்சிகள், பொதுவான செய்திகள் போன்றவற்றை இணைப்பதற்கு உண்டான பணிகளை ஒப்படைத்தல்.

அதிலும் குறிப்பாக நம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு கல்வி பற்றிய செய்திகளையும், மேற்படிபப்பிற்குண்டான தகவல்களையும், வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் குறித்த விழிப்புணர்ச்சியையும் அதிகமதிகம் தர வேண்டும்.

நம் நகரத்தின் முன்னேற்றத்திற்கும், நம் நகர மக்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கும் நம்மால் இயன்ற பணிகளை செய்ய வேண்டும் என்ற உந்துதலின் அடிப்படையில்தான் இவ்விதமான சில ஆலோசனைகள் இணையகுழுவினரிடம் வைக்கப்படுகின்றன. பல ஊர்களின் இணையதளங்கள் அவ்வூரின் வரலாற்றை மட்டுமல்ல அவ்வூரையே நம் கண் முன்னால் நிறுத்துகின்றன. அது போன்ற அல்லது அதைவிட மேலான இணையதளமாக நம் பரங்கிப்பேட்டை இணையதளம் அமைய வேண்டும். இன்ஷா அல்லாஹ் அமையும்.

தங்கள் குழுவின் பணிகள் தொய்வின்றி தொடர வல்லோன் அல்லாஹ்விடம் இருகரமேற்தி இறைஞ்சுவதுடன் என்னால் இயன்ற ஒத்துழைப்புகளையும் அளிக்கின்றேன்.

நன்றி வஸ்ஸலாம்.


என்றும் மாறா அன்புடன்...
பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,