]]

Sunday, June 17, 2007

சிக்குன் குனியாவை ஒழிக்க அரசுக்கு ஒத்துழைப்பு

சிக்குன் குனியாவை ஒழிக்க அரசுக்கு ஒத்துழைப்பு



சிக்குன் குனியா பேன்ற கொடிய நோய்களை ஒழிக்க சங்க உறுப்பினர்கள் தமிழக அரசுடன் ஒத்துழைப்பார்கள் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து சங்கத்தின் தமிழக கிளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:_


இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை தனது உறுப்பினர்களுக்கும் மற்றும் அதை சார்ந்த தனியார் மருத்துவமனைகளுக்கும் சமுதாயத்தில் வரும் எந்த நோயையும் கண்டறிந்து அதனை குணப்படுத்தும் அறிவு திறனும் தேவையான வசதிகளையும் கொண்டு உள்ளது.

சமுதாயத்தில் அவ்வப்போது மக்களை தாக்கும் எந்த நோயையும் கண்டறிந்து அதற்கு வைத்தியம் செய்யும் நவீன சிகிச்சை முறைகளை இந்திய மருத்துவ சங்கம் தனது உறுப்பினர்களுக்கு தேவையான பயிற்சிகளை அவ்வப்போது அளித்து வருகிறது.

சிக்குன் குனியா, டைப்பாய்டு, மலேரிய போன்ற வியாதிகளுக்கு தேவையான சிகிச்சை அளித்து அரசுக்கு முறையாக தெரிவித்து, மேலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இதனை எங்கள் உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள்.


தமிழக அரசுக்கு உறுதுணையாக இந்திய மருத்துவ சங்க மருத்துவர்களும், மருத்துவமனைகளும் என்றும் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேம்.

0 comments: