]]

Thursday, June 14, 2007

கல்வியாளர்களைக் கண்டெடுப்போம்

கல்வியாளர்களைக் கண்டெடுப்போம்

இந்த ஆண்டு +2 மற்றும் sslc யில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த நமதூரை சார்ந்த மாணவ மாணவிகளின் தகவல்களை சேகரித்து யாராவது அப்டேட் செய்யுங்கள், அல்லது அந்த மாணவ மாணவிகளின் தொலைபேசி எண்கள் கிடைத்து எங்களுக்கு மெயிலில் தெரிவித்தால் இணையம் சார்பாக அவர்களை பேட்டிக் கண்டு வெளியிடுவோம்.

1 comments:

said...

அஸ்ஸலாமு அலைக்கும் அ.ப.க அவர்களே.

பரங்கிப்பேடையில் 80% மேல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பில் பாரட்டி பரிசளிக்கும் விழா நடைபெற்றது. அதனைப் பற்றிய தொகுப்பு கீழே.

//அல்லாஹ்வின் கிருபையால் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம், சிங்கப்பூர்
சார்பாக 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள ஏழை மாணவ மாணவியருக்கு இலவச பள்ளிச் சீருடை மற்றும் நோட்புத்தகங்கள் வழங்கும் விழா மற்றும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பாக 10 வது, 12வது வகுப்புகளில் 80% அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கம் வழங்கும் விழாவும், கடந்த 14.06.07, வியாழக்கிழமையன்று பரங்கிப்பேட்டை, கச்சேரித்தெரு H.M.H திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.

விழாவிற்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி.M.S.முஹம்மது யூனூஸ் அவர்கள் தலைமை தாங்கினார். ஹாஜி M.அப்துல் காதர் உமரி அவர்கள் கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தார்கள். கல்விக்குழுவின் தலைவர் L.ஹமீத் மரைக்காயர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அல்ஹாஸ் அறக்கட்டளை நிறுவனர் ஹாஜி. S.O.ஷெக் அலாவுதீன் மற்றும் பேராசிரியை Dr.K.கதிரேசன் அவர்கள் தங்களது பக்குவமான பேச்சினால் மக்களை சீரிய சிந்தனையின்பால் அழைத்தனர். மாணவ மாணவிகளுக்கு நோட்புத்தகங்கள், சீருடை மற்றும் பதக்கங்கள் வழங்கி வாழ்துரை வழங்க கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.இராஜேந்திர ரத்னூ IAS அவர்கள் வருகை தந்திருந்தார்கள். சாதித்த மாணவ மணவியர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்த பிறகு பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம், சிங்கப்பூர் சார்பாக ஏழை மாணவ மாணவியருக்கு இலவச பள்ளிச் சீருடை மற்றும் நோட்புத்தகங்கள் வழங்குவதை துவக்கி வைத்தார். அதன் பிறகு தனது வாழ்த்துரையில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சுனாமியின் போது நடந்துகொண்ட அழகிய முறைப் பற்றி நினைவுகூர்ந்துவிட்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியரை வாழ்த்தி பேசினார். இத்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.//