]]

Thursday, June 14, 2007

ஹஜ் விண்ணப்பங்கள் வினியோகம்

இந்த ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் வினியோகம்

இந்த ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உச்சவரம்பு நிர்ணயிப்பு
மாநில ஹஜ் குழுக்களுக்கு வழங்கப்படும் ஹஜ் விண்ணப்பங்களுக்கான உச்சவரம்பினை மும்பை மத்திய ஹஜ் குழு நிர்ணயித்துள்ளது. அச்சடிக்கப்பட்ட அறிவுரைகளுடன், 2007-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பம் ஒன்றினை ரூ.100-க்கான பணக் கொடுப்பாணை (பே ஆர்டர்) அல்லது கேட்பு காசோலை (டிமான்ட் டிராப்ட்) அளித்து பெற்றுக் கொள்ளலாம். இத்தொகை தங்களின் விண்ணப்பங்களை அன்னியச் செலாவணித் தொகையுடன் சமர்ப்பிக்கும்போது சரிசெய்யப்படும்.
ஹஜ்-2007-க்கான ஹஜ் விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என்று மும்பை மத்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இணையதளம் மூலம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் சம்பந்தப்பட்ட மாநில ஹஜ் குழுக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இணையதளம் மூலம்...
எனவே, ஹஜ் 2007-க்கான அறிவுரைகளுடன் கூடிய விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதள முகவரி மூலம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நேரடியாக, மாநில ஹஜ் குழு அல்லது இணையதளம் மூலம் பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு பெயரில் அன்னியச் செலாவணி முன்பணம் ரூ.10,700-உடன் அனுப்பவேண்டிய கடைசி தேதி 30.6.2007 ஆகும். அதற்கு முன்னரே மனுக்களை அனுப்பி ஏமாற்றத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: