]]

Tuesday, June 26, 2007

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நலவாழ்வு நிதி

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நலவாழ்வு நிதி


வெளிநாட்டுக்கு சென்று துன்பப்படும் இந்தியர்களுக்கு உதவும் வகையில், "என்.ஆர்.ஐ., நலவாழ்வு நிதி'யை ஏற்படுத்த, மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்றுள்ள இந்தியர்களின் நீண்ட கால கனவு, "என்.ஆர்.ஐ., நலவாழ்வு நிதி'. இந்த திட்டவரைவு அமைச்சகத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைவில், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இந்த திட்டம் நிறைவேறிய பிறகு, வெளிநாட்டுக்கு சென்றுள்ள இந்தியர்கள், வேலை இல்லாமலோ அல்லது ஆரோக்கிய குறைவால் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு உதவி செய்யப்படும். அவர்கள் நாடு திரும்பவும் ஏற்பாடு செய்யப்படும்.
அத்துடன், அவர்கள் சுய உதவி குழுக்களை அமைத்து, வர்த்தகத்தில் ஈடுபடவும் உதவி செய்யப்படும். இ.பி.எப்., நிதியை நிர்வகிப்பதைப் போல, "என்.ஆர்.ஐ., நலவாழ்வு நிதி'யும் நிர்வகிக்கப்படும். இதற்கு, முதற்கட்டமாக, ரூ.150 கோடி நிதி தேவைப்படும். அத்தொகை, பல்வேறு விதங்களில் திரட்டப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 comments: