]]

Wednesday, June 20, 2007

மாவட்டத்தில் இணைய தளம் மூலம் குறை தீர்க்கும் வசதி

மாவட்டத்தில் இணைய தளம் மூலம் குறை தீர்க்கும் வசதி: கலெக்டர் தகவல்

கடலுõர்: கடலுõர் மாவட்டத்தில் இணைய தளம் மூலம் பொதுமக்கள் குறை தீர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது எனக் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலுõர் மாவட்டத்தில் இணைய தளம் மூலம் பொதுமக்கள் குறை தீர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இருக்கும் இடத்திலேயே இந்த வசதியை பயன்படுத்தி நீண்ட துõரம் பயணம் செய்து மாவட்ட தலைநகரான கடலுõருக்கு வந்து மனு அளிப்பதை தவிர்கலாம்.
பொதுமக்கள் இதற்கு www.cuddalore.tn.nic.in என்ற இணையதள முகவரியில் "பெட்டிஷன் டூ கலெக்டர்' என்ற தொடர்பை தேர்வு செய்து அதில் தங்கள் மனுவை பதிவு செய்யலாம். மனுவை பதிவு செய்தவுடன் ஓப்புகை எண்ணை குறித்துக்கொள்ளவேண்டும். மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்கள் கணினி மூலமாகவே தெரிவித்துக் கொள்ளலாம்.
மேலும் திங்கள் கிழமைதோறும் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடக்கும் குறை தீர்க்கும் நாளில் மனு அளிப்பவர்கள் அந்த நாளில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் மனுக்களை கணினியில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 comments: