]]

Wednesday, June 20, 2007

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


கடலுர்:கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கடலுர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மிருணாளினி விடுத் துள்ள செய்திக் குறிப்பு:


கடலுரில் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விடுமுறை நாட்களில் நடக்கிறது. பயிற்சியில் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கம் நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால் மார்க்கிங், அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் குறித்து 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், நகை செய்யும் பயிற்சி 30 மணி நேரமும், உரைக்கல் முறையில் நகை தரம் பார்க்கும் செய்முறை பயிற்சி 30 மணி நேரம் உள்பட 100 மணி நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் முடிவில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
விடுமுறை நாட்களில் நடக்கும் இந்த பயிற்சியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் எந்த பகுதியை சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
தற்போது படித்து வரும் கல்விக்கு இடையூறு இல்லாமல் தங்கள் தகுதியினை உயர்த்திக்கொள்ளலாம்.
வரும் ஜூலை மாதம் துவங்கும் பயிற்சியில் சேர விரும்புவோர் டாக்டர் எம்.ஜி. ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வந்து ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்று பயிற்சி கட்டணமாக ரூ. 2 ஆயிரத்து 500 செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவு வங்கிகள் நிறுவனங்களில், பணிபுரிபவர்கள், வங்கி, சங்க செலவிலேயே பயிற்சி பெறலாம்.
மேலும் விபரங்கள் வேண்டுவோர் முதல்வர் டாக்டர் எம்.ஜி. ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையம், 1 ஏ. அப்பாவுத் தெரு, புதுப்பாளையம், கடலுர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

0 comments: