]]

Wednesday, June 20, 2007

சிறப்பாக தொண்டு புரிந்ததற்கு வழங்கும் விருது பெற கடலுõர் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறப்பாக தொண்டு புரிந்ததற்கு வழங்கும் விருது பெற கடலுர் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுர்: சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் இளைஞர்களுக்குக்கான விருதுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வரும் 30ம் தேதிக்குள் கொடுக்கப்பட வேண்டும்.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 12ம் தேதி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்காகன பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கு (15 வயது முதல் 35 வயது வரை) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது. 1.4.2006 முதல் 31.3.2007 வரையிலான காலத்திற்கு செய்த இளைஞர் நலப்பணிகளுக்கான விருதுகள் இந்த நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது.

இளைஞர் தனி நபர் பிரிவில் தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்க வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் சங்க பதிவு சட்டத்தின்படி பதிவு செய்திருக்க வேண்டும்.
நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
எவ்வித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் செய்திருக்கக் கூடாது.
சமுதாய நலப்பணிகளில் தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக்குறிப்பு, இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்க வேண்டும்.
தனி நபர் விருதுக்கு தேர்வு பெறுபவருக்கு ரூ.20 ஆயிரத்திற்கான ரொக்கப் பட்டயம், பதக்கம் 25 பேருக்கும் வழங்கப்படும்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ரூ. ஒரு லட்சம் ரொக்கம், பட்டயம், வெற்றிச் சின்னம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து 3 நகல்களுடன் கருத்துக்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 30ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

0 comments: