]]

Wednesday, June 20, 2007

மதுரை காமராஜ் பல்கலை., தேர்வு முடிவுகள் வெளியீடு

மதுரை காமராஜ் பல்கலை., தேர்வு முடிவுகள் வெளியீடு


மதுரை :மதுரை காமராஜ் பல்கலை., இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பருவமுறை 2007 ஏப்ரல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பி.லிட்., பி.பி.ஏ., பி.காம்., பி.ஏ., எம்.ஏ., (ஆங்கிலம்), எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., ( இந்திய கலாச்சாரம்), எம்.எஸ்.சி., (வேதியியல்), எம்.எஸ்சி ( பாராமெடிகல் வேதியியல்), எம்.ஏ., (மீடியா கம்யூனிகேஷன் மற்றும் மேனேஜ்மென்ட்), எம்.எஸ்சி ( தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்), எம்.எச்.ஆர்.எம்., ஆகிய இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை www.mkuniversity.org,
ஆகிய இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல், அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக www.mkuniversity.org/forms.html பெற்றுக் கொள்ளலாம்.
மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், அதற்குரிய விண்ணப்பங்களை ஜூன் 27ம் தேதிக்குள் தேர்வாணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தேர்வாணையர் சண்முகையா தெரிவித்துள்ளார்.

0 comments: