]]

Wednesday, June 20, 2007

சுற்றுலாத் துறையில் வேலை - ஊனமுற்றோருக்கு இலவச பயிற்சி

சுற்றுலாத் துறையில் வேலை - ஊனமுற்றோருக்கு இலவச பயிற்சி


கோவை : சுற்றுலாத் துறையில் ஊனமுற்றோர், அரவானிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் வளர்ந்தவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வேலைவாய்ப்பும் பெற்றுத் தர மதுரா டிராவல் சர்வீஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.


இது பற்றி அதன் இணைப்பாளர் ராதா வெளியிட்ட செய்தி:

இப் பயிற்சியில் கடவுச்சீட்டு, விசா, காப்புறுதி, மருத்துவக் காப்பீடு, குடிபெயர்தல், குடியேறுதல், கடன் அட்டை, கணக்கு அட்டை, அம்மைகுத்தல், அடிப்படை கணினி, பணம் மாற்றல், வெளிநாட்டிலிருந்து பணத்தை பெறுதல், கணினி முன்பதிவு முறை, வானூர்தி, கப்பல், ரயில், பஸ், சுற்றுலா வாகனம், சுற்றுலா வழிகாட்டுதல், ஷாப்பிங், விடுதி முன்பதிவு, தன்னியக்கம், மக்கள் தொடர்பு, செய்தித் தொடர்பு ஆகியவை அடங்கும்.
இப் பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. பயிற்சி காலம் மூன்று மாதங்கள். தினமும் ஒரு மணி நேரம். மொத்தம் 60 வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள். பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் முதல் தொடங்கும். முதல்கட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே இப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இப் பயிற்சி பெறுபவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு உத்திரவாதம். இதற்கான அடிப்படை கல்வித் தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மதுரா டிராவல் சர்வீஸ் (பி) நிறுவனம், 11/3, காந்தி இர்வின் ரோடு, எழும்பூர், சென்னை-600 008 (ரயில் நிலையம் எதிரில்). தொலைபேசி எண்கள்- 28192002, 28192970.

0 comments: