]]

Saturday, July 7, 2007

1,000 செவிலியர்கள் விரைவில் நியமனம்

1,000 செவிலியர்கள் விரைவில் நியமனம்

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,000 செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள குடும்பல நல பயிற்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செவிலியர், துணை செவிலியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சியில் 568 பேருக்கு பதவி உயர்வு, பணி நியமன ஆணைகள் வழங்கிய பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது:
இந்க கலந்தாய்வு மூலம் 263 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பகுதி நேர செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
230 பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் மற்றும் துணை செவிலியர்களாக பதவி உயர்வுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
26 பேருக்கு இளநிலை உதவியாளர் பதவிக்கான கருணை அடிப்படையிலான பணி ஆணை வழங்கப்பட்டன.
அடிப்படை பணியாளர்களில் 19 பேருக்கு உரிய தகுதி, முதுநிலை வரிசைப்படி தட்டச்சு பணியிடங்களுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதே முறையில் 30 அடிப்படை பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் இளநிலை உதவியாளர் பயிற்சி ஆணை வழங்கப்பட்டன.
சுகாதாரத் துறையில் காலியிடங்களை நிரப்ப உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் படி அனைத்து நிலைகளிலும் காலி பணியிடங்களுக்கு புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு அடிப்படையில் உரிய நபர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற 1,000 செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான ஆட்கள் தேர்வு மற்றும் நியமனங்கள் அனைத்தும் இன்னும் 1 மாதத்துக்குள் மேற்கொள்ளப்படும் என்றார் ராமச்சந்திரன்.
சுகாதாரத்துறை செயலர் வி.கே. சுப்புராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0 comments: