]]

Sunday, July 8, 2007

பரங்கிப்பேட்டை ஒன்றிய கூட்டுறவு தேர்தல்

பரங்கிப்பேட்டை ஒன்றிய கூட்டுறவு தேர்தல்
கூடுதல் இடங்களை தி.மு.க., கைப்பற்றியது

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலில் தி.மு.க.,வினர் அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், கிள்ளை, பிச்சாவரம், பூவாலை, புதுச்சத்திரம் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.

அதை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு மேல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

பு.முட்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமையில் ஜெயராமன், கோபாலகிருஷ்ணன், கார்த்தி வீரிய அர்ச்சுனன், புண்ணியமூர்த்தி, அப்துல் ரசாக் ஆகியோரும், எதிர் அணியை சேர்ந்த தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள் உட்பட 7 பேர் வெற்றி பெற்றனர்.

பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க., பிரதிநிதி காண்டீபன் தலைமையில் அருள்வாசகம், கோவிந்தராஜன், கல்யாணம், அருள்ராஜன், பாண்டியன், தனபால், முனவர் உசேன், மாரியப்பன், நெடுமாறன் மற்றும் எதிர் அணியை சேர்ந்த ஜெய்சங்கர் உட்பட 11 பேர் வெற்றி பெற்றனர்.

கிள்ளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கிள்ளை ரவிச்சந்திரன் தலைமையில் பூராசாமி, ராஜாராமன், தமிழ்வாணன், விஸ்வநாதன், உமாபதிசிவம், வினோபா, ராதாகிருஷ்ணன், சாம்பசிவம், சுப்ரமணியன், சையத் ஹமீது பாஷா ஆகிய 11 பேர் வெற்றி பெற்றனர்.

பூவாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு தி.மு.க., கூட்டணி சார்பில் தி.மு.க., பா.ம.க., காங்., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சியினர் ராஜசேகரன் தலைமையில் சக்திவேல், சோமசுந்தரம், குணசேகரன், திருமால் வளவன், ராஜகுமாரன், பன்னீர்செல்வம், ரெங்கநாதன், மணிமேகலை, சஞ்சீவி, பாலசுப்ரமணியன் உட்பட 11 பேர் வெற்றி பெற்றனர்.

பு.முட்லூருக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், பரங்கிப் பேட்டைக்கு தி.மு.க., ஒன்றிய பிரதிநிதி காண்டீபன், கிள்ளைக்கு கிள்ளை ரவிச்சந்திரன், பூவாலைக்கு ராஜாராமன் உள்ளிட்டவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது.

0 comments: