]]

Tuesday, July 10, 2007

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆயத்த ஆடை வடிவமைப்பு இலவச பயிற்சி

ஆயத்த ஆடை வடிவமைப்பு இலவச பயிற்சிக்கு நேர்காணல்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு ஆயத்த ஆடை வடிவமைப்பில் இலவச தொழிற் பயிற்சி நடத்தப்படுகிறது. இதற்கான நேர்காணல் நாளை நடக்க உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.எஸ்.கண்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் நிதியுதவியோடு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மத்திய அரசு நிறுவனமான, முகப்பேரில் உள்ள ஆயத்த ஆடை வடிவமைப்பு மையம் இப்பயிற்சியை அளிக்கிறது.

  • உற்பத்தி மேற்பார்வை மற்றும் தரக்கட்டுப்பாடு பயிற்சி 6 மாதங்கள், கல்வித் தகுதி பிளஸ் 2.

  • துணி வெட்டும் நிபுணர் பயிற்சி 6 மாதங்கள், கல்வித் தகுதி 10ம் வகுப்பு.

  • ஆடை வடிவமைப்பு பயிற்சி 4 மாதங்கள், கல்வித் தகுதி 10ம் வகுப்பு.

ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இப்பயிற்சிகளில் சேர விரும்புவோரது குடும்ப ஆண்டு வருமானம், கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு ரூ.40 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு ரூ.55 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபைச் சேர்ந்தவர்களாகவும் வயது 18 முதல் 35க்குட்பட்டும் இருக்க வேண்டும்.

பயிற்சிக்கான செலவுத் தொகையை டில்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஏற்றுக் கொள்ளும்.

இப்பயிற்சி முடிந்ததும், அரசு துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.

பயிற்சியில் சேருவதற்கான நேர்காணல், இம்மாதம் 11ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு,

சென்னையில் 807, அண்ணாசாலையில் ஐந்தாவது தளத்தில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறும்.

இதற்கான தொலைபேசி எண்கள்: 28520144 மற்றும் 28520422.

நேர்காணலுக்கு, கல்வித் தகுதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவிலான இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆயத்த ஆடை வடிவமைப்பு இலவச பயிற்சி
தமிழக
அரசு ஏற்பாடு

பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இலவச பயிற்சி

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் பல்வேறு தொழில் பயிற்சிகள் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை முகப்பேரில் உள்ள ஆயத்த ஆடை வடிவமைப்பு மையம் மூலம் சிறப்பு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.


உற்பத்தி மேலாண்மை மற்றும் தரக்கட்டுப்பாடு, துணி வெட்டும் மாஸ்டர் பயிற்சி, ஆடை வடிவமைப்பு ஆகிய 3 விதமான பயிற்சிகளில் தலா 20 பேர் வீதம் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதல் பயிற்சியில் பிளஸ்-2 முடித்தவர்களும், கடைசி இரண்டு பயிற்சிகளில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களும் சேரலாம்.

நாளை நேர்முகத்தேர்வு

இந்த பயிற்சிகளில் சேர தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. சென்னை அண்ணா சாலையில் (எல்.ஐ.சி. பில்டிங் எதிரே) அமைந்துள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழக அலுவலகத்தில் (5-வது மாடி) நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கு நேரடியாக வந்தால் போதும்.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய 044 - 28520144, 28520422 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை ஆயத்த ஆடை வடிவமைப்பு மைய முதல்வர் வி. பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

0 comments: