]]

Tuesday, July 10, 2007

ஆன்-லைன் மூலம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம்

எந்த இடத்தில் இருந்தாலும் செப்டம்பரில் இருந்து ஆன்-லைன் மூலம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம்
தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அறிவிப்பு

எந்த இடத்தில் இருந்தாலும் சென்னை ஐகோர்ட்டில் ஆன்-லைன் மூலம் மனு தாக்கல் செய்யும் வசதி செம்பம்பர் மாதத்தில் இருந்து தொடங்கும் என்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அறிவித்து உள்ளார்.


இந்தியா முழுவதும் அனைத்து கோர்ட்டுகளையும் கம்ப்யூட்டர் மயமாக்குவதற்கான (இ-கோர்ட்டு) தொடக்க நிகழ்ச்சி நேற்று அனைத்து மாநிலங்களிலும் நடந்தது. தமிழக கோர்ட்டுகளுக்காக விழா சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது:-

வேலைப் பளு

நீதித்துறைக்கு பல விதமான சவால்கள் சமீப காலமாக எழுந்துள்ளன. இதனால் வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்படுவது தொடர்கிறது. கோர்ட்டுகளில் வேலைப் பளுவும் அதிகமாக உம்ளது.

தற்போது தொடங்கப்படும் `இ-கோர்ட்டு' மூலம் பல நன்மைகள் ஏற்படக் கூடும். `ஜூடிஷியல் அகடமி'யில் `மெமரி பாங்க்' என்ற தொழில் நுட்பத்தை தொடங்கி, அதன் மூலம் சட்டத்தின் அப்போதைய நிலையை அனைவரும் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்ய முடியும். கோர்ட்டுகளை ஒன்றோடு ஒன்றை இணைக்க முடியும். இ-கோர்ட்டு முறை மூலம் இந்தியாவில் உம்ள 13 ஆயிரத்து 114 கோர்ட்டுகளை இணைக்க முடியும்.

முதல் நிலைப் பணிகள்

இந்த முறை 3 நிலைகளில் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் நிலையில் அனைத்து நீதிபதிகளுக்கும் லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும். இதற்கு ரூ.441 கோடி செலவிடப்படும். 5 ஆண்டு காலகட்டத்தில் முதல்நிலையில் உள்ள பணிகள் முடியும்.


மற்ற 2 நிலைகளும் 3 ஆண்டுகளுக்கும் நிறைவு பெற்றுவிடும். ஒவ்வொரு நீதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்கு 5 கம்ப்யூட்டர்களும், 3 பிரின்டர்களும் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு கோர்ட்டு வளாகத்துக்கும் குறைந்தபட்சம் 2 சர்வர்கள் தரப்படும்.

தேவையில்லாத தள்ளிவைப்பு

இ-கோர்ட்டு மூலம் வழக்கு விசாரணையை தெரிந்து கொள்ளலாம். வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும். இது தவிர வழக்கு ஏன் தள்ளி வைக்கப்பட்டது? வழக்கு எவ்வளவு நேரம் விசாரிக்கப்பட்டது? போன்ற விவரங்கம் பதிவு செய்யப்பட்டு விடும். தேவையில்லாமல் வழக்குகள் தள்ளி வைக்கப்படுவதை கண்டு பிடிக்கலாம்.

எனவே, வெளிப்படையான விசாரணைக்கு இ-கோர்ட்டு தொழில்நுட்பம் வழிவகுக்கும். இதில் ஏதாவது புகார்கள் எழுந்தால் அதுபற்றி நீதிபதியிடம் கேள்வி எழுப்புவதற்கு வழக்கு சம்பந்தப்பட்டவருக்கு உரிமை உள்ளது. அது போல் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மாவட்ட கோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் முறையை கொண்டு வரலாம். மாவட்ட கோர்ட்டுகளில் கம்ப்யூட்டர் அறைகள் உருவாக்கித் தரப்படும்.

14 லட்சம் வழக்குகள்

சென்னை ஐகோர்ட்டை மனுக்கம் இல்லாத கோர்ட்டுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. யார், எங்கிருந்தாலும் ஆன்-லைன் மூலம் இங்கு மனு தாக்கல் செய்யும் வசதியை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்க இருக்கிறேன். இந்த இ-பைலிங் மூலம், கோர்ட்டுகளில் பேப்பர் இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும்.

இந்த தொழில்நுட்பத்தால் வழக்கு விசாரணை துரிதமாக, வெளிப்படையாக நடத்தப்படும். வழக்கு தேக்கம் இதனால் குறையும். இந்தியாவில் தற்போது 14 லட்சம் வழக்குகள் தேக்க நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

நீதிபதிகளுக்கு லேப்-டாப்

இந்தியாவில் 15 ஆயிரம் நீதிபதிகளுக்கும், தமிழகத்தில் 700 நீதிபதிகளுக்கும் லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படுகின்றன. இ-கோர்ட்டு மூலம் மற்ற கோர்ட்டுகளின் முக்கிய தீர்ப்புகள், வழக்கின் நிலை போன்றவற்றை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். மேலும், மனு தாக்கல் செய்ததில் இருந்து அது பைசல் செய்யப்படும் வரை அதுபற்றிய விவரங்களை காணலாம்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கே.வெங்கட்ராமன் வரவேற்புரையாற்றினார். நீதிபதிகள் டி.முருகேசன், பிரபா ஸ்ரீதேவன் சிறப்புரையாற்றினார்கள். நீதிபதி மணிக்குமார் நன்றி கூறினார்.

முன்னதாக சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் ஆர்.மாலா, சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி பெரிய கருப்பையா, தமிழ்நாடு ஜூடிஷியல் அகடமி இயக்குனர் விமலா, சென்னை சிறுவழக்குகள் கோர்ட்டு முதன்மை நீதிபதி அருணா ஜெகதீசன் உட்பட நீதிபதிகள் சிலருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா லேப்-டாப் கம்ப்யூட்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகம் அனைவரும் கலந்து கொண்டனர். அட்வகேட் ஜெனரல் விடுதலை உள்ளிட்ட அரசு வக்கீல்கள், வக்கீல்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

0 comments: