]]

Saturday, July 7, 2007

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு உதவித் தொகை

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலை இல்லாதவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது


கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான தகுதிகள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 , பட்டப் படிப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதும், மற்ற பிரிவினர்களுக்கு 40 வயது மிகாமல் இருக்கவேண்டும்.

பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்க கூடாது.

ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்து படிக்க கூடாது. ஆனால் அஞ்சல் வழிக் கல்வி, தொலை தூரக் கல்வி பயில்வோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

மனுதாரர் தமிழ்நாட்டில் படித்தவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்

உள்ளிட்ட தகுதி உள்ளவர்கள் அவர்களது கல்விச் சான்று மற்றும் வேலை வாய்ப்பக அடையாள அட்டை ஆகியவற்றிறுடன் வேலை வாய்ப்பு அலுவலகம் வந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பம் காலை 10 மணி முதல் 1 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதி அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாதம் ரூ.200, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அலுவலக வேலை நாட்களில் பெறப்படும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments: