]]

Sunday, July 22, 2007

வருமான வரித்துறையில் புதிதாக 1,474 வரி உதவியாளர்கள் நியமனம்

வருமான வரித்துறையில் புதிதாக 1,474 வரி உதவியாளர்கள் நியமனம்
17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

வருமான வரித்துறையில் புதிதாக 1,474 வரி உதவியாளர்கள் (டாக்ஸ் அசிஸ்டெண்ட்ஸ்) நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வுக்கு அடுத்த மாதம் 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரி உதவியாளர் பணி

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் வெவ்வேறு துறைகளுக்கு ஊழியர்களை தேர்வு செய்வதற்காக போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது வருவான வரித்துறையில் 1,474 வரி உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்காக நவம்பர் மாதம் 18-ந் தேதி போட்டித் தேர்வை நடத்த உள்ளது.

  • பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • கம்ப்யூட்டரில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துகளை டைப்பிங் செய்யும் ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும்.

  • வயது 20 முதல் 27-க்குள் இருக்க வேண்டியது அவசியம்.

  • ஓ.பி.சி. வகுப்பினர் எனில் 30 வயது வரையும், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு பற்றிய முழு விவரமும் ஜுலை 21-26ந் தேதியிட்ட `எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்' இதழில் விரிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள விண்ணப்ப படிவ மாதிரியை போன்று அச்சிடப்பட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தலாம். இந்த விண்ணப்பங்கள் வெளியே கடைகளிலும் கிடைக்கும்.


மேலும், ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இணையதளத்திலும் விண்ணப்ப மாதிரி வெளியிடப்பட்டு உள்ளது. அதை டவுன்லோடு செய்து விண்ணப்பமாக பயன்படுத்தலாம்.

தேர்வுக்கட்டணம் ரூ.100. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அடுத்த மாதம் 17-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பதவி உயர்வு பெறலாம்

வருமான வரி தொடர்பான விவரங்களையும், ஆவணங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்வதும், தேவையானபோது அந்த தகவல்களை அதிகாரிகளுக்கு எடுத்துக்கொடுப்பதும் வரி உதவியாளர்களின் பணி ஆகும்.

இந்த பணியில் சேருவோர் துறைத்தேர்வுகள் எழுதி, முதுநிலை வரி உதவியாளர், வருமான வரி இன்ஸ்பெக்டர், வருமான வரி அதிகாரி என்று படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.

இளம் வயதில் பணியில் சேருவோர் வருமான வரி உதவி கமிஷனர் வரை பதவி உயர்வு பெறும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: