]]

Saturday, July 28, 2007

குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு...

குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பிப்போர், தபால் அலுவலகங்களில் எட்டு இலக்க ரசீது எண்ணை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

987 பணியிடங்களுக்கு தபால் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கட்டணம் ரூ.100 செலுத்தி, அதற்கான ரசீதும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தின் வரிசை எண் 18ல் தபால் கட்டணம் செலுத்தியதற்கான எண் எழுத வேண்டும். எட்டு இலக்க எண் எழுதிய விண்ணப்ப படிவத்தை மட்டுமே கம்ப்யூட்டர் ஏற்றுக்கொள்ளும். இல்லாதவை நிராகரிக்கப்படும்.
பல தபால் அலுவலகங்களில் நான்கு இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணையே பலர் எழுதியுள்ளனர். தபால் அலுவலக ஊழியர்களுக்கு முறையான அறிவிப்புகள் கிடைக்காததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இம்மாதம் 30ம் தேதி வரை தேர்வில் கலந்து கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்வோர், தபால் அலுவலகங்களில் எட்டு இலக்க எண் வழங்கப்படவில்லை எனில், அவர்களிடம் எட்டு இலக்க எண்ணை கேட்டு, அந்த எண்ணை விண்ணப்ப படிவத்தில் எழுதி விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நான்கு இலக்கங்களுடன் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களுக்கு பாதிப்பு வராது என்று தபால் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

0 comments: