]]

Monday, July 23, 2007

வங்கிக் கடன் பெறாத விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு திட்டம்

வங்கிக் கடன் பெறாத விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் காப்பீடு திட்டம்
வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

வங்கிக் கடன் பெறாத விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டத்தில் பயனடையலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்திய வேளான் காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. தற்போது வங்கியில் கடன் பெறாத விவசாயிகளும் இந்த திட்டத்தால் பயனடையலாம்.

வங்கிக் கடன் பெறாத விவசாயிகள் நெல், ராகி,சோளம் பயிர்களுக்கு 2.5 சதவீத பிரிமியத் தொகை செலுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நெல்லுக்கு பிரிமியத் தொகையாக ரூ.132 செலுத்தவேண்டும். இந்த தொகையில் 50 சதவீதம் மாநில அரசு மானியமாக வழங்குகிறது. இதனால் விவசாயிகள் பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.66 செலுத்தினால் போதும்.

எனவே கடலூர் மாவட்ட விவசாயிகள் இயற்கை சீற்றங்களிலிருந்து தங்கள் பயிர்களை பாதுகாத்துக் கொள்ள பயிர் காப்பீடு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த திட்டத்தில் சொர்னாவாரி, குறுவை நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் 31ம் தேதி கடைசி நாளாகும்.

0 comments: