]]

Monday, July 23, 2007

முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு மசோதா ஆந்திர சட்டசபையில் நிறைவேறியது

முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு மசோதா
ஆந்திர சட்டசபையில் நிறைவேறியது

கல்வி மற்றும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா ஆந்திர சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக, மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்தினருக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை நிறைவேற்ற ஆந்திர அரசு கடந்த 2004ம் ஆண்டு முடிவு செய்தது.

ஆனால், அரசுத் துறைகளில் 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை நான்கு சதவீதமாக குறைத்து ஆந்திர அமைச்சரவை சமீபத்தில் குறைத்தது. இதையடுத்து, இந்த மசோதா நேற்றிரவு சட்டபையில் நிறைவேற்றப்பட்டது.

0 comments: