]]

Wednesday, July 18, 2007

ரெயில்களின் விபரம் அறிய ஒரே தொலைபேசி எண் அறிமுகம்

ரெயில்களின் விபரம் அறிய ஒரே தொலைபேசி எண் அறிமுகம்

நாடு முழுவதும் உள்ள ரெயில் பயணிகளின் வசதிக்காக ஒற்றைச் சாளர வசதி மையத்தை ரெயில்வே துறை நேற்று தொடங்கியது. இதன் மூலமாக ரெயில்கள் புறப்படும் மற்றும் சேரும் நேரம், டிக்கெட் `பி.என்.ஆர்.' நிலவரம், இட வசதி குறித்த தகவல் மற்றும் உதவி என அனைத்து சேவைகளையும் `139' என்ற ஒரே எண்ணை தொடர்பு கொண்டு பெறலாம்.


இந்த வசதியை தொடங்கி வைத்த ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத் கூறுகையில், ``நாடு முழுவதும் உள்ள மக்கள் சாதாரண தொலைபேசியில் இருந்து `139' என்ற எண்ணை உள்ளூர் அழைப்பு வாயிலாகவே தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.

தற்போது வட மாநிலங்களில் பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல். சாதாரண தொலைபேசி வாயிலாக மட்டுமே இந்த சேவையை பெற முடியும்.

செப்டம்பர் மாதத்துக்கு பின் இந்தியா முழுவதும் இதர போன் நிறுவனங்கள் மற்றும் செல்போன் வாயிலாக தகவலை பெறும் வகையில் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும்.

0 comments: