]]

Tuesday, July 17, 2007

கடலூர் தபால் நிலையத்தில் புத்தக விற்பனை

கடலூர் தபால் நிலையத்தில் புத்தக விற்பனை

கடலூர், ஜுலை17-

15 சதவீத தள்ளுபடி வழங்கும் வகையில் கடலூர் தபால் நிலையத்தில் புத்தக விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவரும் தபால் துறை தற்போது பல்வேறு நவீன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கடலூர் தபால் நிலையத்தில் புத்தக விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு கடலூர் கோட்ட அஞ்சலக துறை கண்காணிப்பாளர் கனகராஜன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கரத்தினம் திறந்துவைத்தார்.

தள்ளுபடி விலை

இந்த புத்தக நிலையத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் தேவையான கலை, இலக்கியம், பண்பாடு, பொழுது போக்கு, உடல்நலன், மனநலன், விளையாட்டு, பொது அறிவுதிறன் போன்றவைகள் அனைத்து நூல்களும் 15 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மாணவர்கள்

மாணவர்களுக்கு தேவையான ஓவியம், தேவதை கவிதைகள், நல்லொழுக்க கதைகள், பொது அறிவு கையேடு, வேலைவாய்ப்பு கையேடு போன்ற அனைத்து புத்தகங்களும் விற்பனை நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.

அனைத்து வேலை நாட்களிலும் புத்தக நிலையம் திறந்து இருக்கும்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை புத்தகங்கள் விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

0 comments: