]]

Saturday, July 7, 2007

தபால் மூலம் பி.எட். படிப்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்
நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம். இதற்கு மாணவ, மாணவிகள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் தபால் மூலம் பி.எட். படிப்பை நடத்தி வருகிறது. இதில் தமிழ் வழியில் 500 இடங்களும், ஆங்கில வழியில் 500 இடங்களும் உள்ளன.


இந்த படிப்பில் சேர பட்டதாரியாகவும், பள்ளிக்கூடங்களில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகமள் பணி அனுபவம் தேவை. இந்த படிப்புக்கு நுழைவுத்தேர்வு மூலம் ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள்.


நடப்பு கல்வி ஆண்டில் (2007-08) பி.எட். படிப்பில் சேர கடந்த 5-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பக் கட்டணம் ரூ.500.

விண்ணப்பங்களை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதன் கல்வி மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.


நுழைவுத்தேர்வு 11.11.2007 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பம் பெற கடைசி நாள் அக்டோபர் 1-ந் தேதி ஆகும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்டோபர் 9-ந் தேதிக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் 044-22300704 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம்.

0 comments: