]]

Saturday, July 7, 2007

உள்ளாட்சி அமைப்புகள் பிரித்தல், சேர்த்தல், நிலை உயர்த்துதல் குறித்த கூட்டம்

உள்ளாட்சி அமைப்புகள் பிரித்தல் குறித்த கூட்டம்
சிதம்பரத்தில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு பங்கேற்பு

சிதம்பரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பிரித்தல் சம்மந்தமாக நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு பங்கேற்றார்.

உள்ளாட்சி அமைப்புகள் பிரித்தல், சேர்த்தல், நிலை உயர்த்துதல் தொடர்பான உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நேற்று நடந்தது.

நகர மன்ற வளாகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமை தாங்கினார். ஊராட்சிகளின் மாவட்ட துணை இயக்குநர் நடராஜன் வரவேற்றார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சிலம்பு செல்வி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசுகையில்,

''உள்ளாட்சி அமைப்புகளை முறைபடுத்த பிரித்தல், சேர்த்தல், நிலை உயர்த்தல் போன்றவை செய்யப்படுகிறது. எனவே, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊராட்சி பிரதிநிதிகள் உட்பட பல தரப்பட்டவர்களின் கருத்துகளை கேட்டு என்னிடம் எழுத்து மூலம் முடிவை தெரிவிக்க வேண்டும். அந்த முடிவின் மீது உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவு சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் இது சம்மந்தாக எடுக்கும் முடிவு மக்களுக்கு பயன்தரும் வகையில் அமைய வேண்டும். சுய நலமாக இருக்கக்கூடாது'' என்றார்.

கூட்டத்தில் சிதம்பரம் நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம், ஆர்.டி.ஓ., குழந்தைவேலு, நகராட்சி கமிஷனர் ரமணி, பேரூராட்சிகளின் துணை இயக்குநர் ஜெம்புலிங்கம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளை சேர்த்தல், பிரித்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சி அமைப்புகளின் பிரித்தல் சேர்த்தல் மற்றும் நிலை உயர்த்துதல் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளை பிரித்தல், சேர்த்தல் மற்றும் நிலை உயர்த்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடந்தது.

எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், நகர மன்றத் தலைவர்கள் தங்கராசு, பச்சையப்பன், வடலூர் பேரூராட்சி தலைவர் அர்சுணன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் புஷ்பராஜ், கடலூர் நகர மன்றத் துணைத் தலைவர் தாமரைச் செல்வன், ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி பஞ்சமூர்த்தி, பா.ம.க., நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், மா.கம்யூ., ஒன்றியச் செயலாளர் மாதவன், நகர செயலாளர் சுப்புராயன், கடலூர் அனைத்து நகர் நல கூட்டமைப்பின் தலைவர் மருதவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசியதாவது:

''கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பிரித்தல், சேர்த்தல் மற்றும் நிலை உயர்த்துதல் ஆகிய பணிகள் நடக்கவுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள பஞ்சாயத்துகளில் சேர்த்தல் பிரித்தல் மற்றும் நிலை உயர்த்த வேண்டும் என்றால் தங்கள் பகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்களை தர வேண்டும். அவர்கள் அதை தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இதன் அடிப்படையில் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து மூன்றாவது கட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் தற்போது உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. எனவே இது குறித்து கருத்துகளை கூறலாம்'' என்றார்.

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துகளை கூறினர்.

கூட்டத்தில் திட்ட அலுவலர் மெகராஜ், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஜம்புநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: