]]

Wednesday, July 18, 2007

தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
மத்திய அரசுக்கு ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் கோரிக்கை

தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சென்னை திருவல்லிக்கேணியில் விழா நடந்தது. விழாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மொகைதீன்கான் முன்னிலை வகித்தார்.


இந்த விழாவில் தமிழ்நாடு ஹஜ்கமிட்டி துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் பேசும்போது கூறியதாவது:-

குலுக்கல் முறையில் தேர்வு

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் 3 ஆயிரத்து 384 பேர் செல்கிறார்கள். அவர்களை கடந்த சனிக்கிழமை புதுக்கல்லூரியில் குலுக்கல் முறையில் தேர்வு செய்தோம். அவர்கள் இன்னும் 4 மாதத்தில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். அதேநேரம் சுமார் 2 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


எனவே தற்போது தமிழ்நாட்டில் இருந்து புனித ஹஜ் பயணம் செய்யும் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் ஹஜ் பயணிகளுக்கான தமிழகத்திற்கு ஒதுக்கும் கோட்டா குறைவு. எனவே மத்திய அரசு தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி மூலம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். முதல்-அமைச்சரும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயிரம் பேருக்கு ஹஜ் பயண வாய்ப்பு கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். முதல்-அமைச்சர் ஹஜ் பயணிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரசிடெண்ட் அபுபக்கர் கூறினார்.

0 comments: