]]

Wednesday, July 18, 2007

பரங்கிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு

கார் மோதி பெண் பலியான வழக்கில் டிரைவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை பரங்கிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு

பரங்கிப்பேட்டை,ஜுலை.18-

கார்மோதி பெண் பலியான வழக்கில் டிரைவருக்கு 1 ஆண்டு சிறைதண்டனை விதித்து பரங்கிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.



கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூர் மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. விவசாயி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு (வயது 48). சம்பவத்தன்று சின்னப்பொண்ணு சிதம்பரம்- கடலூர் மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.


அப்போது சிதம்பரத்தில் இருந்து கடலூருக்கு சென்ற கார் சின்னப்பொண்ணு மீது மோதியது. இந்த விபத்தில் சின்னப்பொண்ணு பலத்த காயமடைந்தார். காயமடைந்த சின்னப்பொண்ணு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக சின்னப்பொண்ணு இறந்தார். இது பற்றி பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் காமராஜ் என்பவரை கைது செய்து, பரங்கிப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


நேற்று முன்தினம் அந்த வழக்கு நீதிபதி பிருந்தாதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிருந்தாதேவி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காமராஜக்கு 1 ஆண்டு சிறைதண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

0 comments: