]]

Saturday, July 7, 2007

சுனாமியால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் அரசு காப்பகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சுனாமியால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் அரசு காப்பகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சுனாமியால் பெற்றோரை இழந்த சிறுவர், சிறுமியர்கள் அரசு சுனாமி சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.


சுனாமி குழந்தைகள் காப்பகம்


கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு சேவை இல்ல வளாகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அரசு சுனாமி சிறப்பு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியுள்ள குழந்தைகளுக்கு கல்வி, உணவு, தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும்.


இந்த காப்பகத்தில் 32 குழந்தைகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. சுனாமியால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாக தாய், தந்தையரை இழந்த அல்லது யாராவது ஒருவரை இழந்த 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள், 5 முதல் 9 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடைய சிறுவர், சிறுமியர்கள் பெயர் மற்றும் முகவரியுடன் பிறந்த சான்று மற்றும் கல்விச்சான்றுடன் மாவட்ட சமூக நல அதிகாரி, புதுப்பாளையம், கடலூர்-1 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது பற்றிய விவரங்களை 293235 என்ற டெலிபோன் எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

0 comments: