]]

Tuesday, July 17, 2007

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இதய பரிசோதனை முகாம்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இதய பரிசோதனை முகாம்

சிதம்பரம்,ஜுலை.17-

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இதய பரிசோதனை முகாம் தொடக்க விழா நடந்தது. முகாமை பல்கலைக்கழக துணை வேந்தர் வெங்கட்ரங்கன் தொடங்கி வைத்தார்.


இதய பரிசோதனை முகாம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள ராஜா முத்தையா இதய நிறுவனம் இதயத்தை கவனி-2007 என்கிற சிறப்பு முகாமை வருகிற 29-ந் தேதி வரை நடத்துகிறது.

இதன் தொடக்க விழா சாஸ்திரி அரங்கில் நேற்று நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சிதம்பரம் வரவேற்று பேசினார். முகாமை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் வெங்கட்ரங்கன் தொடங்கி வைத்தார்.

முகாமில் சிறப்பு விருந்தி னராக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் இந்த இதய பரிசோதனை முகாமை வரவேற்கிறேன். போலீஸ் காரர்கள் பல்வேறு சூழ்நிலையில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேருக்கு இதய நோய் இருக்க வாய்ப்புள்ளது.இதனால் பல்கலைக்கழகம் போலீஸ்காரர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பரிசோதனை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு டி.ஐ.ஜி.வன்னிய பெருமாள் பேசினார்.

முகாமில் மருத்துவ துறை முதல்வர் ராமநாதன், தொலை தூரக்கல்வி இயக்கக இயக்குனர் நாகேஸ்வரராவ், துணை வேந்தரின் ஆலோசகர் வேம்பார், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய தலைவர் பாலசுப்பிர மணியன், சின்டிகேட் உறுப்பினர் லட்சுமிகாந்தன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குமார், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில் வேலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னதாக துணைவேந்தர் வெங்கட்ரங்கன் இதயத்தை கவனி என்கிற கையேட்டை வெளியிட அதன் முதல் பிரதியை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.வன்னியபெருமாள் பெற்றுக்கொண்டார்.

கலந்து கொண்டவர்கள்

பரிசோதனை முகாம் அண்ணா மலைநகர், சிதம்பரம், செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், காரைக்கால், மதுரை, நாமக்கல், புதுச்சேரி, புதுக்கோட்டை உள்பட 27 தொலைத்தூரக்கல்வி மையங்களிலும் தொடங்கப்பட்டது.


முகாமில் மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம், துறை முதல்வர்கள் ஆட்சிக் குழு, கல்விக்குழு மற்றும் ஆளவை மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை இதய நிறுவனத்தின் துணை தலைவர் டாக்டர் சிதம்பரம் செய்து வருகிறார்.

0 comments: