]]

Thursday, August 23, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 4

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை

செயலர்,முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி.
Ilayangudi, Sivaganga District

E-mail: abideen245400@yahoo.com
Ph: 14564-245400/265252

---------------------------------------------------------------------------------------

மீன்வள அறிவியல் படிப்பு

மத்திய அரசின் நிதியுடன் நடைபெறும் கிரிஷி விக்யான் கேந்திரா அமைப்புகள் கால்நடை மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.

அது மட்டுமின்றி புளுகிராஸ், அனிமல் பெல்ஃபேர் போர்டு ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளும் கால்நடை மருத்துவப் பட்டதரிகளுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பை வழங்குகின்றன.

மீன்வள அறிவியல் பட்டப்படிப்பை தூத்துக்குடியிலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்துகிறது.

தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இக்கல்லூரி, மீனவள அறிவியலில் இளநிலைப் பட்டம் (பி.எஃப்.எஸ்.சி.) மற்றும் பி.எச்.டி., படிப்புகளை நடத்துகிறது.

மீன்வள அறிவியலில் பட்டப்படிப்பில் சேர விரும்புவோரும், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொழில் நுட்ப நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உரிய கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

உயர்கல்வி வாய்ப்புகள்

மீன்வள அறிவியலில் பட்டப்படிப்பு படித்தோர், எம்.எஃப்.எஸ்.சி எனப்படும் முதநிலைப் பட்டப்படிப்பை படிக்க வாய்ப்புகள் உள்ளன. இதே கல்லூரியில் முதநிலைப் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. அதன் பிறகு பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பு படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

வேலை வாய்ப்புகள்

மீன்வள அறிவியல் பட்டதாரிகளுக்கு, மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள், மீன் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

எம்.எஃப்.எஸ்.சி படித்தோர் ஏ.ஆர்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றால் இந்திய வேளாண்கழகத்தின் ஆராய்ச்சி நிலையங்களில் விஞ்ஞானியாகப் பணியாற்ற வாய்ப்புகள் உண்டு.

நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், நாட்டின் பல பகுதிகளிலுள்ள மீன்வளக் கல்லூரிகளில் விரிவுரையாளராக வேலை பெறவும் வாய்ப்புகள் உண்டு.


அரசின் மீன்வளத்துறையில் இப்படிப்பு படித்தோருக்கு வேலை வாய்ப்புகள் உண்டு. ஆயினும் இப்படிப்பு படித்தோர், தனியார் வேலைவாயப்புகளையே விரும்புகிறார்கள். காரணம் உழைப்புக்கேற்ற ஊதியம் தனியார் துறையில் கிடைப்பதே.

மீன்வள அறிவியல் படித்தோருக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. காரணம் அங்கு மீன் பண்ணைகள் அதிக அளவில் இருப்பதே.


எஸ். ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: