]]

Thursday, August 23, 2007

சிறப்பு திறன் பயிற்சி

உதவித் தொகை பெறும் இளைஞர்களுக்கு வேலை பெற உதவும் சிறப்பு திறன் பயிற்சி

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவி பெறும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் உதவியுடன் வேலை பெற உதவும் சிறப்பு திறன் தொடர்பிலான பயிற்சி வழங்கப்பட உள்ளது என வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவி பெறும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் பேர் வீதம் மத்திய அரசின் உதவியுடன் வேலை பெற உதவும் சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் வேலைவாய்ப்பு பதிவுதாரர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது ஒரு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுபவராக இருக்க வேண்டும்.

பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயது வரம்பை கடக்காதவராக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உச்சவரம்பு வயது 45 ஆகும்.

பயிற்சிக்கு தேர்வு பெறுபவர்களுக்கு அருகிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பிற்பகல் 5 மணி முதல் 8 மணி வரை (சனிக்கிழமை உட்பட) பயிற்சி திட்டத்தின்படி பயிற்சிக்கு ஏற்ப ஒரு மணி நேரம் முதல் 5. 20 மணி நேரம் வரை பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக்கான கட்டணம் செலுத்த தேவையில்லை. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் மற்றும் எளிதில் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. பயிற்சியில் சேருபவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகையும் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு பதிவும் தொடர்ந்து பராமரிக்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக வேலைவாய்ப்பு பெறுவது எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. பயிற்சியில் சேர விரும்பும் பயனாளிகள் இன்றும், நாளையும் (24ம் தேதி) கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

0 comments: