Tuesday, February 22, 2011
பரங்கிப்பேட்டையில் மார்க்கக் கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித் தொகை
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: உதவித் தொகை, கல்வி, தவ்லத் நிஸா, பரங்கிப்பேட்டை, பெண், மார்க்கம்
Wednesday, October 24, 2007
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழிலாளர் குழந்தைகளுக்கு பாடநூல் மற்றும் கல்வி உதவித் தொகை பெற வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கடலூர் மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடலூர் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் சசிகலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இதில் குழந்தைகள் காப்பகம், தையற்பயிற்சி வகுப்பு, தொழிலாளர் நலப்படிப்பகம், தொழிலாளர்களுக்கு மூக்கு கண்ணாடி வாங்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உடல் ஊனமுற்றோர் மற்றும் அவரது குழந்தைகள் மூன்று சக்கர வண்டி பெறுவதற்கும், செயற்கை உறுப்புகள் வாங்கவும், காது கேளா தோர் மற்றும் காது கேளாத குழந்தைகளுக்கு காது கேட் கும் கருவி வாங்கவும், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படிப்பதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதே போன்று பிளஸ் 1 முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்க தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் உதவித் தொகையும்,
பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் விவசாயம் போன்ற தொழிற் கல்வி, தொழிற் பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலைப் கல்வி படிப்பதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற இருவருக்கு ஊக்கத் தொகையும்,
பணியின் போது தொழிலாளர் இறந்தால் ஈமச் சடங்கிற்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
அடிப்படை கணினி பயிற்சி பெற உதவித் தொகை பெறவும், பாடநூல் உதவித் தொகை மற்றும் கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி ஊக்கத் தொகை ஆகியவற்றை பெற வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நலத் திட்டங்கள் குறித்த விபரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற
"செயலாளர்",
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்,
த.பெ. எண் : 718,
சென்னை - 60000 6'
என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட ஸ்டாம்புகள் ஒட்டிய உறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: உதவித் தொகை, கல்வி, தொழிலாளர், விண்ணப்பங்கள்
சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
கலெக்டர் அறிவிப்பு
சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் 767 சிறுபான்மை இன மாணவ, மாணவிகளுக்கு பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற் கல்வி ஆகியவை 2007-08ம் ஆண்டில் பயில உதவி தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமலும், மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
கல்லூரி பட்டப் படிப்பு மற்றும் மேற்படிப்பு பயிலும் மொத்த செலவை அரசு ஏற்றுக் கொள்ளும்.
பராமரிப்பு படியாக விடுதி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரமும், விடுதி இல்லாத மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும் கூடுதலாக வழங்கப்படும்.
தமிழகத்தில் இயங்கி வரும் பிற தொழிற்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் மற்றும் பராமரிப்பு படி வழங்கப்படும்.
இந்த சலுகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகள் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சிறுபான்மையினர் நலம் மற்றும் மேம்பாட்டு இயக்குனர் அலுவலக ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நல்ல வாய்ப்புகளை பயனபடுத்தி கொள்ள முன்வருவோர் எவருமுண்டோ...?
நாம் வாழும் நாட்டில் நமக்கான வாய்ப்புகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால் நம்மைவிட ஏமாளிகள் யாருமில்லை என்பதை கசப்பாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
நம் ஊரில் நற்பணிகளாற்றும் அமைப்புகள் இதுபோன்ற செய்திகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்பன்... கலீல் பாகவீ
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: அறிவிப்பு, உதவித் தொகை, கலெக்டர், கல்வி, சிறுபான்மை
Saturday, September 15, 2007
மேற்படிப்பிற்கான கல்வி உதவித் தொகை
முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித் தொகை
முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
படைப்பணி காரணமாக இறந்த, ஊனமுற்ற படைவீரர்களின் விதவையர் மற்றும் முன்னாள் படை வீரர்கள், விதவைகள் ஆகியோரின் பிள்ளைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2007 - 2008ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர்க்கை பெற்றவர்களுக்கு (அலுவலர் தரத்திற்கு கீழ் இதர தரத்தினர்) உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த கல்வி உதவித் தொகை பெற பிளஸ் 2 மற்றும் முதுகலை பாடத்திற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு மதிப்பெண் பெற்றிருந்து, மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை பட்டப்படிப்பு, மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், எம்.சி.ஏ., பார்மசி மற்றும் நர்சிங் ஆகியவைகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ. ஆயிரத்து 250ம், மாணவிகளுக்கு ரூ. ஆயிரத்து 500ம் வழங்கப்படும்.
உதவித் தொகை பெற்று படிப்பை தொடரும் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றால் மட்டுமே படிப்பு முடியும் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
50 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தால் உதவித் தொகை நிறுத்தப்படும்.
இதற்கான விண்ணப்பத்தை www.dgrindia.com வரிசை எண்.27 மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இது பற்றிய விவரங்களை உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், கடலூர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: உதவித் தொகை, கல்வி, பிள்ளை, முன்னாள் படைவீரர்
Friday, September 7, 2007
ரூ.5 ஆயிரம் கோடி கல்வி உதவித் தொகை
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ரூ.5 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகை வழங்குவதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் கூறியதாவது:-
கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பினை பெருக்கும் திட்டத்தின் தற்போதைய வடிவம் அடுத்த ஆண்டு (2008) மார்ச் வரை தொடரும். இதற்கான ரூ.445 கோடி ஒதுக்கீட்டு தொகையை மத்திய மந்திரி சபை அனுமதித்து உள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்குவதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த உதவித் தொகை பெறும் மாணவர்களின் பெற்றோர்களது சம்பளம் ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: உதவித் தொகை, கல்வி மேம்பாடு, தாழ்த்தப்பட்ட வகுப்பு, ஸ்காலர்ஷிப்
Thursday, August 23, 2007
சிறப்பு திறன் பயிற்சி
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவி பெறும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் உதவியுடன் வேலை பெற உதவும் சிறப்பு திறன் தொடர்பிலான பயிற்சி வழங்கப்பட உள்ளது என வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவி பெறும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் பேர் வீதம் மத்திய அரசின் உதவியுடன் வேலை பெற உதவும் சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சியில் சேர விரும்பும் வேலைவாய்ப்பு பதிவுதாரர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது ஒரு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுபவராக இருக்க வேண்டும்.
பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயது வரம்பை கடக்காதவராக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உச்சவரம்பு வயது 45 ஆகும்.
பயிற்சிக்கு தேர்வு பெறுபவர்களுக்கு அருகிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பிற்பகல் 5 மணி முதல் 8 மணி வரை (சனிக்கிழமை உட்பட) பயிற்சி திட்டத்தின்படி பயிற்சிக்கு ஏற்ப ஒரு மணி நேரம் முதல் 5. 20 மணி நேரம் வரை பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சிக்கான கட்டணம் செலுத்த தேவையில்லை. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் மற்றும் எளிதில் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. பயிற்சியில் சேருபவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகையும் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு பதிவும் தொடர்ந்து பராமரிக்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக வேலைவாய்ப்பு பெறுவது எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. பயிற்சியில் சேர விரும்பும் பயனாளிகள் இன்றும், நாளையும் (24ம் தேதி) கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: உதவித் தொகை, சிறப்பு திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு


