கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழிலாளர் குழந்தைகளுக்கு பாடநூல் மற்றும் கல்வி உதவித் தொகை பெற வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கடலூர் மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடலூர் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் சசிகலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இதில் குழந்தைகள் காப்பகம், தையற்பயிற்சி வகுப்பு, தொழிலாளர் நலப்படிப்பகம், தொழிலாளர்களுக்கு மூக்கு கண்ணாடி வாங்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உடல் ஊனமுற்றோர் மற்றும் அவரது குழந்தைகள் மூன்று சக்கர வண்டி பெறுவதற்கும், செயற்கை உறுப்புகள் வாங்கவும், காது கேளா தோர் மற்றும் காது கேளாத குழந்தைகளுக்கு காது கேட் கும் கருவி வாங்கவும், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படிப்பதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதே போன்று பிளஸ் 1 முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்க தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் உதவித் தொகையும்,
பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் விவசாயம் போன்ற தொழிற் கல்வி, தொழிற் பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலைப் கல்வி படிப்பதற்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற இருவருக்கு ஊக்கத் தொகையும்,
பணியின் போது தொழிலாளர் இறந்தால் ஈமச் சடங்கிற்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
அடிப்படை கணினி பயிற்சி பெற உதவித் தொகை பெறவும், பாடநூல் உதவித் தொகை மற்றும் கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி ஊக்கத் தொகை ஆகியவற்றை பெற வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நலத் திட்டங்கள் குறித்த விபரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற
"செயலாளர்",
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்,
த.பெ. எண் : 718,
சென்னை - 60000 6'
என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட ஸ்டாம்புகள் ஒட்டிய உறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.


0 comments:
Post a Comment