31ம் தேதி துவக்கம்
இது குறித்து முன்னாள் படை வீரர் நல அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வரும் 31ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடக்கிறது.
இந்த தேர்வில் சோல்ஜர் டிரேட்ஸ்மென் பதவிக்கு
மெட்ரிக் படிப்பிற்கு குறைவாக படித்தவர்கள்
பதினேழரை முதல் 23 வயது வரையும்,
166 செ.மீட்டர் உயரம்,
48 கிலோ எடையும் இருக்க வேண்டும்.
சோல்ஜர் ஜெனரல் டியூட்டிக்கு
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று
பதினேழரை முதல் 21 வயதிற்குள்
166 செ.மீட்டர் உயரமும்,
50 கிலோ எடையும் இருக்க வேண்டும்.
சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட், சோல்ஜர் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கு
பதினேழரை வயது முதல் 23 வயது வரையும்
மேல் நிலை கல்வி தேர்ச்சி மற்றும் பட்டயக் கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு
சோல்ஜர், டிரேட்ஸ்மென் பதவிக்கு வரும் 31ம் தேதி சான்று சரிபார்ப்பு 1ம் தேதி உடற்தகுதித் தேர்வு,
சோல்ஜர் ஜெனரல் டியூட்டிக்கு 1ம் தேதி சான்று சரிபார்ப்பும், 7ம் தேதி உடற்தகுதி தேர்வும் நடைபெறும்.
சோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட் பதவிக்கு 3ம் தேதி சான்று சரிபார்ப்பும், 4ம் தேதி உடற்தகுதியும்,
சோல்ஜர் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் பதவிக்கு 9ம் தேதி சான்று சரி பார்ப்பும், 5ம் தேதி உடற் தகுதி தேர்வும் நடைபெற உள்ளது.
மேலும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள்
கல்விச் சான்று,
பள்ளி மாற்றுச் சான்று,
மதிப்பெண் பட்டியல்,
பிறப்பிட சான்று,
என்.சி.சி.,
ஜாதிச் சான்று,
முன்னாள் படை வீரரின் அசல் படை விலகல் சான்று
மற்றும்
12 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன்
செல்ல வேண்டும்.
இந்த நல்ல வாய்ப்புகளை பயனபடுத்தி கொள்ள முன்வருவோர் எவருமுண்டோ...?
நாம் வாழும் நாட்டில் நமக்கான வாய்ப்புகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால் நம்மைவிட ஏமாளிகள் யாருமில்லை என்பதை கசப்பாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
நம் ஊரில் நற்பணிகளாற்றும் அமைப்புகள் இதுபோன்ற செய்திகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்பன்... கலீல் பாகவீ
0 comments:
Post a Comment