சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
கலெக்டர் அறிவிப்பு
சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் 767 சிறுபான்மை இன மாணவ, மாணவிகளுக்கு பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற் கல்வி ஆகியவை 2007-08ம் ஆண்டில் பயில உதவி தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமலும், மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
கல்லூரி பட்டப் படிப்பு மற்றும் மேற்படிப்பு பயிலும் மொத்த செலவை அரசு ஏற்றுக் கொள்ளும்.
பராமரிப்பு படியாக விடுதி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரமும், விடுதி இல்லாத மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும் கூடுதலாக வழங்கப்படும்.
தமிழகத்தில் இயங்கி வரும் பிற தொழிற்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் மற்றும் பராமரிப்பு படி வழங்கப்படும்.
இந்த சலுகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகள் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சிறுபான்மையினர் நலம் மற்றும் மேம்பாட்டு இயக்குனர் அலுவலக ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நல்ல வாய்ப்புகளை பயனபடுத்தி கொள்ள முன்வருவோர் எவருமுண்டோ...?
நாம் வாழும் நாட்டில் நமக்கான வாய்ப்புகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால் நம்மைவிட ஏமாளிகள் யாருமில்லை என்பதை கசப்பாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
நம் ஊரில் நற்பணிகளாற்றும் அமைப்புகள் இதுபோன்ற செய்திகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்பன்... கலீல் பாகவீ
0 comments:
Post a Comment