கடலூரில் அகில இந்திய கால்பந்து போட்டி
ஜனவரி மாதம் நடக்கிறது
கடலூரில் வருகிற ஜனவரி மாதம் அகில இந்திய கால்பந்து போட்டி நடக்கிறது.
கால்பந்து
'கடலூர் கால்பந்து அகடமி' என்ற விளையாட்டு பயிலரங்கம் கடலூரில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தலைவர் தி. கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் கால்பந்து அகடமி சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்க பயிற்சி அளிக்கும்.
இதற்காக 12, 16 வயதுள்ள பள்ளி மாணவ மாணவிகளை தேர்ந்து எடுத்து பயிற்சி அளிக்கப்படும்.
குறிப்பாக கிராமபுற மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
முதல் கட்டமாக மாவட்ட, மாநில போட்டிகளை நடத்துவோம்.
அகில இந்திய போட்டி
இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களை கால்பந்து விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தும்.
வருகிற ஜனவரி மாதம் அகில இந்திய கால்பந்து போட்டியை நடத்த இருக்கிறோம்.
இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு கால்பந்து அகடமி தலைவர் கண்ணன் கூறினார். பேட்டியின்போது மாவட்ட விளையாட்டு அதிகாரி பத்மனாபன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 comments:
Post a Comment