கடலூரில் மாலை நேர நீதிமன்றம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்தில் மாநகராட்சிகளில் உள்ள நகரங்களில் மாலை நேர நீதிமன்றங்கள் நடந்து வருகின்றன.
அதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறு குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மாலை நீதி மன்றங்களை திறக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி கடலூரிலும் மாலை நேர கோர்ட்டு திறக்கப்படுகிறது.
வேலை நாட்கள்
இந்த நீதிமன்றத்தில் எல்லா வேலை நாட்களிலும் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை சிறு குற்ற வழக்குகள் எடுத்து தீர்ப்பு வழங்கும்.
ஒவ்வொரு வாரமும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் முறை அடிப்படையில் நியமிக்கப்படுவர்.
இந்த நீதி மன்றம் கடலூரில் உள்ள நீதித்துறை நடுவர் எண் 3 நீதிமன்றத்தில் இயங்கும்.
பொதுமக்கள் வசதிக்காக வழக்குகளை அன்றே முடிப்பதற்காகவும் இந்த நீதிமன்றம் செயல்படுகிறது.
இந்த தகவலை முதன்மை மாவட்ட நீதிபதி ராமகிருஷ்ணன், தலைமை குற்ற இயல் நீதித்துறை நடுவர் ஜாகீர்உசேன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment