]]

Saturday, September 15, 2007

மேற்படிப்பிற்கான கல்வி உதவித் தொகை

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித் தொகை

முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.


படைப்பணி காரணமாக இறந்த, ஊனமுற்ற படைவீரர்களின் விதவையர் மற்றும் முன்னாள் படை வீரர்கள், விதவைகள் ஆகியோரின் பிள்ளைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2007 - 2008ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர்க்கை பெற்றவர்களுக்கு (அலுவலர் தரத்திற்கு கீழ் இதர தரத்தினர்) உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த கல்வி உதவித் தொகை பெற பிளஸ் 2 மற்றும் முதுகலை பாடத்திற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு மதிப்பெண் பெற்றிருந்து, மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை பட்டப்படிப்பு, மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், எம்.சி.ஏ., பார்மசி மற்றும் நர்சிங் ஆகியவைகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ. ஆயிரத்து 250ம், மாணவிகளுக்கு ரூ. ஆயிரத்து 500ம் வழங்கப்படும்.


உதவித் தொகை பெற்று படிப்பை தொடரும் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றால் மட்டுமே படிப்பு முடியும் வரை உதவித் தொகை வழங்கப்படும்.

50 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தால் உதவித் தொகை நிறுத்தப்படும்.

இதற்கான விண்ணப்பத்தை www.dgrindia.com வரிசை எண்.27 மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இது பற்றிய விவரங்களை உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், கடலூர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

0 comments: