]]

Sunday, September 16, 2007

நுகர்வோர் கமிஷன் தீர்ப்பு

விரைவு தபால்களை குறிப்பிட்ட காலத்துக்குள் பட்டுவாடா செய்யாவிட்டால் தபால் இலாகா நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்

நுகர்வோர் கமிஷன் தீர்ப்பு

விரைவு தபால்களை, குறிப்பிட்ட காலத்துக்குள் பட்டுவாடா செய்யாவிட்டால், தபால் இலாகா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று, நுகர்வோர் கமிஷன் தீர்ப்பு கூறி இருக்கிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் சாகியாபாத் நகரை சேர்ந்த யதேந்திரா சர்மா என்பவர், கடந்த 2002-ம் ஆண்டு ஒரு விரைவு தபாலை, இந்திய தபால் துறை மூலம், சிங்கப்பூருக்கு அனுப்பினார். அந்த தபால் குறிப்பிட்ட காலத்துக்குள் சிங்கப்பூரில் உள்ள குறிப்பிட்ட விலாசதாரருக்கு கிடைக்கவில்லை.


இதைத் தொடர்ந்து, சர்மா, நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், "தபால் துறையிடம் இருந்து நஷ்ட ஈடு பெற முடியாது'' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, டெல்லியில் உள்ள நுகர்வோர் கமிஷனிடம், சர்மா அப்பீல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜே.டி.கபூர் விசாரித்தார். நேற்று இந்த வழக்கில் அவர் தீர்ப்பு அளித்தார்.

தீர்ப்பு விவரம் வருமாறு:-

விரைவு தபால்களை, குறிப்பிட்ட காலத்துக்குள் பட்டுவாடா செய்யாவிட்டால், தபால் துறை நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் நஷ்ட ஈடு தொகை பெற உரிமை உண்டு. இந்த வழக்கில் நஷ்ட ஈடு தொகை எவ்வளவு என்பது பிறகு அறிவிக்கப்படும்.

விரைவு தபால் முறையில் அனுப்பப்படும் தபால்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட இடத்தில் பட்டுவாடா செய்யப்படும் என்று தபால் துறை அறிவித்து இருக்கிறது. எனவே, அதன்படி செய்யாவிட்டால், பாதிக்கப்பட்டவர் நஷ்ட ஈடு கோரலாம்.

குறிபிட்ட காலத்துக்குள் தபால்களை பட்டுவாடா செய்யாதது, தபால் துறையின் கவன குறைவையும், ஒழுங்கீனத்தையும் வெளிப்படுத்துகிறது. தபால் துறை குற்றம் செய்ததாகவே கருத வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

0 comments: