]]

Sunday, August 19, 2007

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு : இலவச பயிற்சி வகுப்புகள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மெயின் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மனித நேய அறக் கட்டளை சார்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது.

சென்னை நந்தனம் சி.ஐ.டி., நகரில் உள்ள மனித நேய அறக்கட்டளை சார்பில் தமிழகத்தை சேர்ந்த சமுதாய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு இலவச பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

2007ம் ஆண்டிற்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் முதல்நிலை தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மெயின் தேர்வு விரைவில் நடக்க உள்ளது. மெயின் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு மனித நேய அறக்கட்டளை சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

விருப்பமுள்ள மாணவர்கள் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஆதாரம், போதிய கல்வித் தகுதி சான்றிதழுடன் மைய இயக்குனரை 22, 23ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தித்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

எந்த விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்திருந்தாலும், இப்பயிற்சியில் சேரலாம். மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். "பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், தரமான உணவு, தேவையான பாடப்புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படும்.

மெயின் தேர்வில் வெற்றி பெற்ற பின், மாதிரி நேர்முகத் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என மையத்தின் பயிற்சி இயக்குனர் வாவூசி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு மைய இயக்குனரை 044 24358373, 99406 70110 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மனித நேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மைய வழிகாட்டு குழுவில் வா.செ. குழந்தைசாமி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பூர்ணலிங்கம், அலெக்சாண்டர், அபுல் ஹசன், மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

0 comments: