அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் போக்குவரத்து கட்டுப்பாடு தினம்
பரங்கிப்பேட்டை அருகே அரசு பள்ளி மாணவர்கள் போக்குவரத்து கட்டுப்பாடு தினத்தை கொண்டாடினர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் போக்குவரத்து கட்டுப்பாடு தினத்தை கொண்டாடினர்.
பு.முட்லூர் ஜவுளிக்கடை அருகே என்.சி.சி., அலுவலர் விநாயகம், உதவி தலைமை ஆசிரியர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் என்.சி.சி., மாணவர்கள் போக்குவரத்தை சீர்படுத்தும் பணி குறித்த விதிமுறைகளை விளக்கி கூறினர்.
0 comments:
Post a Comment