]]

Wednesday, August 29, 2007

முஸ்லிம்களுக்கென தனி வங்கி

முஸ்லிம்களுக்கென தனி வங்கி தொடங்க அனுமதி கோருகிறது ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி

இந்தியாவில் முஸ்லிம்களுக்கென தனியாக வங்கி தொடங்க ரிசர்வ் வங்கியிடமும், மத்திய அரசிடமும் ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி அனுமதி கோரியுள்ளது.


இதுதொடர்பாக அந்த வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:


உலகில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் 15 கோடி முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு சேவை அளிக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு தனி வங்கி தொடங்க ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி திட்டமிட்டுள்ளது.


இதுதொடர்பாக அனுமதி கேட்டு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்காக தனி விதிமுறைகள் உருவாக்க வேண்டும் எனில் அதற்கு யோசனை தெரிவிக்கவும் வங்கி தயாராக உள்ளது.


வங்கியின் சேவை, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வருவாய் பகிர்வு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்டவை முஸ்லிம்களின் ஷரியத் கோட்பாடுகளை ஒட்டியே இருக்கும் என்றார்.


ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியின் இந்திய அதிகாரிகளில் ஒருவரான அர்ஜித் டே கூறியதாவது:


இந்த வங்கி உலகில் 57 நாடுகளில் முஸ்லிம்களுக்கு என வங்கிச் சேவையை அளித்து வருகிறது. இந்தோனேசியாவில் 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 15 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, இந்தியாவிலும் இத்தகைய சேவையைத் தொடர வங்கி விருப்பம் கொண்டுள்ளது என்றார்.


ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி இந்தியாவில் மேலும் 29 இடங்களில் தனது கிளைகளைத் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.


ஆனாலும், அந்த வங்கியின் புதிய திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.


முஸ்லிம்களுக்கு எனத் தனி வங்கிச் சேவை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசு வங்கிக் கொள்கைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டி வரும்.


மேலும், இதற்கான நடைமுறைகளையும் ரிசர்வ் வங்கி உருவாக்க வேண்டி வரும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

0 comments: