Tuesday, January 26, 2010
Monday, September 3, 2007
இந்தியா விண்ணில் வரைந்த வெற்றி: இன்சாட் 4சி ஆர்.
இந்தியாவின் நவீன தகவல் தொடர்பு திறன் கொண்ட இன்சாட் 4 சி ஆர் செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப் 04 ராக்கெட் மூலம் ஞாயிறன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த செயற்கைக் கோள், தொழில்நுட்ப காரணங்களுக்காக சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக மாலை 6.20 மணியளவில் செலுத்தப்பட்டது.
3 கட்டங்களாக திட்டமிடப்பட்ட வேகத்துடன் டிரான்ஸ்பாண்டர்களை விண்வட்டப்பாதையில் செலுத்தியதும், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
இன்சாட் 4 சி ஆர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோள் மூலம் வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு வசதிகளை அளிப்பதற்காக உயர் சக்தி வாய்ந்த 12 கே.யு. பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
முக்கியத்தலைவர்களும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்
பதிப்பு
வாசகன்
at
0
comments
Wednesday, August 29, 2007
முஸ்லிம்களுக்கென தனி வங்கி
முஸ்லிம்களுக்கென தனி வங்கி தொடங்க அனுமதி கோருகிறது ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி
இந்தியாவில் முஸ்லிம்களுக்கென தனியாக வங்கி தொடங்க ரிசர்வ் வங்கியிடமும், மத்திய அரசிடமும் ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி அனுமதி கோரியுள்ளது.
இதுதொடர்பாக அந்த வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
உலகில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் 15 கோடி முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு சேவை அளிக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு தனி வங்கி தொடங்க ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனுமதி கேட்டு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்காக தனி விதிமுறைகள் உருவாக்க வேண்டும் எனில் அதற்கு யோசனை தெரிவிக்கவும் வங்கி தயாராக உள்ளது.
வங்கியின் சேவை, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வருவாய் பகிர்வு மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்டவை முஸ்லிம்களின் ஷரியத் கோட்பாடுகளை ஒட்டியே இருக்கும் என்றார்.
ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியின் இந்திய அதிகாரிகளில் ஒருவரான அர்ஜித் டே கூறியதாவது:
இந்த வங்கி உலகில் 57 நாடுகளில் முஸ்லிம்களுக்கு என வங்கிச் சேவையை அளித்து வருகிறது. இந்தோனேசியாவில் 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 15 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, இந்தியாவிலும் இத்தகைய சேவையைத் தொடர வங்கி விருப்பம் கொண்டுள்ளது என்றார்.
ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி இந்தியாவில் மேலும் 29 இடங்களில் தனது கிளைகளைத் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
ஆனாலும், அந்த வங்கியின் புதிய திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
முஸ்லிம்களுக்கு எனத் தனி வங்கிச் சேவை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசு வங்கிக் கொள்கைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டி வரும்.
மேலும், இதற்கான நடைமுறைகளையும் ரிசர்வ் வங்கி உருவாக்க வேண்டி வரும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: இந்தியா, முஸ்லிம் வங்கி, ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி
Friday, August 17, 2007
இந்தியா ஏழை நாடா?
அறுபதாண்டு ஆகி விட்டது, நாம் சுதந்திரம் அடைந்து! இந்தியா இன்னும் ஏழை நாடா? பணக்கார நாடாகி விட்டதா? இதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்ககள், இந்த பட்டியலை பார்த்து! பட்டியலில் நம் நிலை 1947ம் ஆண்டில் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது என்ற புள்ளி விவரம் தரப்பட்டுள்ளது.
பதிப்பு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
at
0
comments
Labels: இந்தியா, ஏழை நாடு, பணக்கார நாடு, புள்ளி விவரம்



