]]

Friday, August 24, 2007

படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு ....

படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு கல்வி அளிக்கும் திட்டம் விஸ்தரிப்பு

பள்ளிக்கு செல்லாத அல்லது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்ட மாணவிகளுக்கு கல்வி அளிக்கும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டம் (கே.ஜி.பி.வி.,), மேலும் 16 ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.


மத்திய அரசு நிதி உதவியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழகத்தில் ஏற்கனவே 37 ஒன்றியங்களில் அமலில் இருந்து வருகின்றன.

இதில், ஆயிரத்து 900 மாணவிகள் படித்து வருகின்றனர். 6, 7, 8ம் வகுப்புகளுக்குரிய வயதுடைய மாணவிகளுக்கு கல்வி கற்பித்து சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இந்த படிப்பை முடிக்கும் மாணவிகள், "ரெகுலர்' பள்ளிகளில் அடுத்த வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மேற்பார்வையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயிலும் மாணவிகளுக்கு உணவு, தங்கும் இட வசதி உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 ஒன்றியங்களுக்கு விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், 950 மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று எஸ்.எஸ்.ஏ., துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments: