]]

Tuesday, August 21, 2007

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இரட்டை பட்டம் அறிமுகம்

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இரட்டை பட்டம் அறிமுகம்

சிங்கப்பூர் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் 16 மாதத்தில் எம்.பி.ஏ., எம்.ஐ.டி., என இரண்டு பட்டங்களை பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இது குறித்து, ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக சர்வதேச வர்த்தகப் பிரிவு தலைவர் ஜெர்ரி ஹிஸ்டன் ஐ.எம்.டி.பி., நிறுவன இயக்குனர் ஜிஜியோ சகார்யாஸ், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் சிங்கப்பூரில் இயங்கி வருகிறது. ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் எம்.பி.ஏ., எம்.ஐ.டி., (மாஸ்டர் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளை 16 மாதத்தில் மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்த இரட்டை பட்டப்படிப்பு திட்டத்தால், மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் மிச்சமாகும். சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஜூலை, அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்தியாவிலிருந்து 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்திய பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஐ.எம்.டி.பி., நிறுவனம் உதவும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

0 comments: