]]

Monday, September 3, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 14

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்

Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,

விரிவுரையாளர், விலங்கியல் துறை

செயலர், முன்னாள் மாணவர் கழகம்

Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.

E-mail: abideen245400@yahoo.com

Ph: 04564-245400/265252

---------------------------------------------------------------------------------------

புகைப்படக்கலை

புகைப்படக் கலையில் நிபுணத்துவம் பெற விரும்புபவர்கள் நான்கு ஆண்டு படிப்பாக அதைப் பயில முடியும்.

கல்வித்தகுதி

இத்துறையில் சேர்வதற்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடித்தவர்கள் எளிதில் சேரலாம்.

படிப்பின் வகைகள்

ஒரு வாரத்துக்கான சான்றிதழ் படிப்பு கூட இருக்கின்றது.

ஸ்டுடியோ ஒளியமைப்பு, லார்ஸ் பார்மட் புகைப்படக்கலை, கட்டடக்கலை மற்றும் இன்டிரியர் புகைப்படக்கலை, போட்டோ டூர் பாரஸ்ட் அண்ட் அனிமல் போட்டோகிராஃபி, டிஜிட்டல் புகைப்படக்கலை என்று பல்வேறு படிப்புகள் உள்ளன.

வாய்ப்புகள்

இன்டஸ்ட்ரியல், விளம்பரம், ஸ்டில், டெக்னிக்கல், ஃபேஷன், தடயவியல் துறைகளில் புகைப்படக்காரராகவும், லேப் டெக்னீசியன், போட்டோ ஜர்னலிஸ்ட் ஆகவம் பல வாய்ப்புகள் உள்ளன.

எங்கே படிக்கலாம்?

இந்த படிப்பை ஊட்டியில் உள்ள லைஃப் அண்ட் லைட் அகாடமி நிறுவனத்தில் படிக்கலாம். புகைப்படக் கலையை மட்டுமே சொல்லித் தரும் கல்லூரி ஆசியாவிலேயே இது மட்டும் தான்.

11, 12ம் வகுப்புகளில் புகைப்படக்கலைப் பயிற்சி சென்னை சூளைமேடு மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ளது.

அரசு கவின் கலைக் கல்லூரிகளிலும் புகைப்படக் கலை பயிலலாம்.

S. ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: