பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses
S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.
E-mail: abideen245400@yahoo.com
Ph: 04564-245400/265252
---------------------------------------------------------------------------------------
இனிமையான வாய்ப்பிற்கு இன்டீரியர் டெக்கரேஷன் படியுங்கள்
கட்டிடம் கட்ட 10 லட்சம் ரூபாய் செலவழித்தால், உள் அலங்காரம் செய்ய குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்யத் தயங்காத காலம் இது. கட்டிடங்களுக்கு உள் அலங்காரம் செய்வதும் ஏறக்குறைய கவிதை எழுதுவது மாதிரி அனுபவித்துச் செய்ய வேண்டிய விஷயம்.
கல்வித்தகுதி
குறைந்த பட்ச தகுதி 12ம் வகுப்பு ஆகும்.
ஆனால் பட்டப்படிப்பு முடித்த பிறகு சேருபவர்கள் அதிகமான தொழில் வாய்ப்புக்களை எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
வாய்ப்புக்கள்
இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை காட்டிலும் வெளிநாடுகளில் இப்படிப்பிற்கு அதிகமான வரவேற்புகள் உள்ளன. காரணம் வெளிநாட்டவர் சுற்றுச் சூழலை அலங்காரம் செய்வதில் அதிக விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்க்ள.
இந்தியாவிலும் இதற்கான வாய்ப்புக்கள் குறைவில்லை.
பல பொறியாளர்களிடம் ஆலோசகராக சேரலாம்.
கட்டிட உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கலாம்.
தனியாக இது சார்ந்த தொழில் தொடங்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.
கற்றுத்தரும் குறிப்பிடத்தக்க இடங்கள்
இப்படிப்பு உள்ளது கீழ்க்கண்ட நிறுவனங்களில் இப்படிப்பிற்கான மற்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்
மகாராஜா மகளிர் கல்லூரி, ஈரோடு
ஜஸ்டிஸ் பஷீர் அகமது மகளிர் கல்லூரி,
காலேஜ் ஆர்ட்ஸ் கிராஃப்ட்ஸ்,
பெரியமேடு, சென்னை.
அவினாஸிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோம் சயின்ஸ், பெருந்துறை
S. ஆபிதீன்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்
மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!
0 comments:
Post a Comment