]]

Wednesday, September 5, 2007

அல் மதரஸத்துல் மஹ்முதிய்யா பட்டமளிப்பு விழா

அல் மதரஸத்துல் மஹ்முதிய்யா பட்டமளிப்பு விழா

சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக்கல்லூரியின் அல் மதரஸத்துல் மஹ்முதிய்யா (திருக்குர்ஆன் ஹிஃப்ழ் கல்லூரி, மீராப்பள்ளி, பரங்கிப்பேட்டை) ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த ரஜப் மாதம் பிறை 21 (05.08.2007) ஞாயிறு அன்று பரங்கிப்பேட்டை, மீராப்பள்ளி அல் மதரஸத்துல் மஹ்முதிய்யா வளாகத்தில் இனிதே நடைபெற்றது.

உலமா பெருமக்கள், மாணவர்கள், நகர ஜமாஅத்தார்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிப்பேட்டை பேருராட்சி மன்றத்தின் தலைவர் ஜனாப். முஹம்மது யூனுஸ் அவர்கள் தலைமையேற்றார்கள்.

அல் மதரஸத்துல் மஹ்முதிய்யா நிர்வாகி கலிமா ஹாஜி. ஷேக் அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலானா அல்ஹாஜ் முஹம்மது யாகூப் ஹஜ்ரத் அவர்கள் மாணவர்களுக்கு ஸனது (பட்டம்) வழங்கி துஆ செய்தார்கள்.

செய்தி : www.parangipettai.com

0 comments: