பரங்கிப்பேட்டையில் சுனாமி திட்டப்பணிகள் பற்றிய கலந்தாய்வு
பரங்கிப்பேட்டையில் சுனாமி திட்டப்பணிகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தில் உள்ள 37 சுய உதவி சுனாமி குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சிதம்பரம் வேளாண்மை அலுவலர் ராஜராஜசோழன் பங்கேற்று பயிற்சியளித்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் பணிகளான மண்புழு உரம் தயாரித்தல், முந்திரி, நிலக்கடலை உடைக்கும் கருவிகள், நெல் நேரடி விதைப்பு கருவிகள் வழங்குதல் போன்ற செயலாக்கம் செய்து காண்பிக்கப்பட்டன.
உதவி வேளாண்மை அலுவலர் வீரராகவன் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment