சுதந்திர தின வைர விழா
புத்தகக் கண்காட்சி
புதுச்சேரியில் 60வது சுதந்திர தின புத்தகக் கண்காட்சியை காங்., தலைவர் சண்முகம் திறந்து வைத்தார்.
60வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள விஜயா திருமண நிலையத்தில் புத்தகக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று காலை நடந்தது.
புதுச்சேரி காங்., தலைவர் சண்முகம் கண்காட்சியை திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். செயலாளர் கண்ணன் பெற்றுக்கொண்டார்.
இக்கண்காட்சி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்.
கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு.
முன்னணி பதிப்பகங்களான ஆனந்த விகடன், கிழக்குப் பதிப்பகம், வானதி, கண்ணதாசன், விஜயா, நன்மொழி, நர்மதா, சீக்ஸ்சென்ஸ், பருதா, உமா, பூங்கொடி, அருணோதயம் உள்ளிட்ட பல பதிப்பகங்களின் புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment