]]

Sunday, September 16, 2007

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்... தொடர் 23

பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்
Degree & Diploma Courses

S. ஆபிதீன் M.A., M.Sc., M.Phill., B.Ed.,
விரிவுரையாளர், விலங்கியல் துறை
செயலர், முன்னாள் மாணவர் கழகம்
Dr. ஜாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்.
E-mail:
abideen245400@yahoo.com - Ph: (04564) 245400 / 265252
---------------------------------------------------------------------------------------
இதழியல் காட்டும் இனிய வேலை வாய்ப்பு

பத்திரிக்கையியல் துறையில் புகழ்பெற்றது ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் மாஸ் கம்யூனிகேஷன் ரிஸர்ச் சென்டர் நடத்தும் படிப்புகள்.

பெருமை மிகு இப்படிப்புகளில் சேருவதற்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.

இதற்கு காரணம் தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலை பெறுவதை இலக்காகக் கொண்டு இங்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் பயிற்சிகளை அளிக்காமல் தகவல் தொடர்பு சாதனங்களின் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றும் வகையில் இங்கு பயிற்சி தரப்படுகின்றது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனம் புது தில்லியில் உள்ள Indian Institute of Mass Communication தகவல் தொடர்புத் துறையில் அதிநவீனப் பயிற்சிகள் மற்றும் ஆய்வுப் பணிகளுக்கான களமாக இக்கழகம் திகழ்கிறது.

இங்கு நடத்தப்படும் பட்டயப்படிப்புகள் :-



PG Diploma in Journalism, (English) New Delhi and Dhenkanal (Orissa) Medium – English

PG Diploma in Advertising and Public Relations, New Delhi Medium – English and Hindi

PG Diploma in Radio and Television Journalism, New Delhi Medium – English and Hindi

மேற்கூறப்பட்ட அனைத்துப் படிப்புகளிலும் சேருவதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலைப் பட்ட வகுப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

நுழைவு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பயிற்சிகள் குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் பின்வரும் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

The Registrar,
Indian Institute of Mass Communication,
Aruna Asaf Ali Marg, JNU New Campus,
New Delhi – 110067
.

S. ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வாழ அமைப்போம் இராஜபாட்டை!!

0 comments: